நீண்ட இரவுகளின் தனிமையில்
குளிர்ந்த புறவெளியை நோக்கி
நெடுந்தவம் புரிகிறேன் பெண்ணே
ஆறு ஆண்டுகள் இழந்தோம்
அன்பின் பகிர்தலை, அறியவில்லை நாம்
வம்பாய் கழித்தோம், வாழ்க்கை தொலைத்தோம்
காதலின் அருமை தெரிந்தும் உன்னை
புறக்கனித்தேன். நான் என்றும் உன்
அன்பை கோரி நின்றேன்.
காதல் கோரிப் பெருவதல்ல
தேடி வரவேண்டும். என் காரியங்களால்
செயல்களால், பேசுமொழியால், உடல் மொழியால்
புரிந்தது பெண்ணே, தெளிவுற்றேன்.